நான் சரி செய்கிறேன்
மந்தமான ஒரு
அந்தி வேளை..
தேசிய நெடுஞ்சாலை
ஒன்றின் ஓரத்து மரத்தடியில்..
இரண்டு வழிப் போக்கர்கள்..
பயணித்த வாகனம்
பழுதுபட்டதால்
இடுப்பில் கை வைத்தபடி..
இருவரும்..
எவரையோ கைப்பேசியில்
உடனே வர சொன்ன நேரம்..
அவர்கள்
எதிரில் சென்று நின்றேன்..
உங்கள் வாகனத்தை சரி செய்கிறேன்..
நகருங்கள் என்றேன்..
கொஞ்ச நேரத்தில்
முடித்தும் கொடுத்தேன்..
அவர்கள்..
கிளம்பி சென்றதும்
சிரித்துக் கொண்டேன்..
..
அமுதா..
நம் காதலைக்
கொலை செய்தவர்கள்..
நம்மை
கொலை செய்தவர்கள்..
இன்னும் சிறிது நேரத்தில்..
..
..
பிரேக் பிடிக்காததால்
கார் கட்டுப்பாட்டை இழந்து
சாலை ஒர
கிணற்றில் தலைகீழாக கவிழ்ந்து..
இருவர் அதே இடத்தில் பலி..
..
என்ன அமுதா..
பேப்பர் பார்த்தாயா..
..
வா..
இனி மறுபடியும் பிறப்போம் !