இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு

படித்தவன் தவறிழைத்தால் பாழாய்ப் போவான்
பார்புகழ்ப் பாரதியும் அன்றே பாடிவைத்தான்
கவிதை வடிப்பவர்க்கும் இவ்விதி பொருந்துமன்றோ
கூச்சமின்றி விரசமாய்ப் பாடியா வயிறுவளர்ப்பாய்?

இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு?
கனித்தமிழ் பாட்டிலே பொல்லாத வரியெதற்கு?
நனிப்பசும் பாலில் துளிவிஷம் சேர்த்தாற்போல்
உயர்தமிழ்ப் பாட்டிலே வசைமொழி சேர்க்கின்றாய்!

கெடுமதி உணர்வைச் சிந்தையில் தேக்கிக்
கவிதையெனப் படைப்பது கொடும்பாதகச் செயலாகும்!
நிறைமொழி மாந்தர் உள்ளம் உவக்கச்
சிறுமதி கொண்டோரைக் கடிந்துரைப்போம் வாரீர்!!

(குறிப்பு; திரையிசைப் பாடல் என்னும் பேரில், ஆபாசப் பாட்டெழுதும் எழுத்து மூர்க்கரைச் சாடி எழுதப்பட்டது.)

எழுதியவர் : குழலோன் (18-Jun-15, 6:43 am)
சேர்த்தது : குழலோன்
பார்வை : 54

மேலே