எனக்கும் பிரசவ வேதனை ------------------------------------------ஊ வ கணேசன்

எனக்கும்
பிரசவ வேதனை தெரியும்..
நானும்
அனுபவித்து இருக்கிறேன்....
ஆம்......
இயந்திர வாழ்க்கையில்
இடையே கிடைக்கும்
சிறிது நேர
இடைவெளியில்
இலக்கியத் தாய்க்கு
கவிதை மாலை சூட
நினைத்த போது
எழுத்து மலர்கள்
பற்றாக்குறை என்பது
எனக்குப்
பிரசவ வேதனை தான்.!