என் எண்ணம் -----------------------------------------------------------------------ஊ வ கணேசன்

ஈன்ற தாய்க்கு
சொந்தப் பிள்ளையாக
இருப்பதை விட
இலக்கியத் தாய்க்கு
தத்துப் பிள்ளையாக
இருப்பதில்
பெருமிதம்
கொள்கிறேன்....
தனத்திற்காக
பழகுவோர் மத்தியில்
தமிழுக்காக
எழுதுவோர் கண்டு
அதிசயிக்கிறேன்..
ஆதலால்
அவர்களை
ஆராதிக்கிறேன்....!
---------------------ஊ . வ . கணேசன் .