யோகா
யோகா
==========================================ருத்ரா
வினாடிகளை
காப்பியாற்றிக்குடித்தேன்.
நேனோ காமிராவில்
கோப்பைக்குள்
கோடி கோடி சுநாமி அலைகள்.
காற்றின் நூலிழைக்குள் புகுந்து
ஊற்றின் "ஊத்தைப்பல்" தேடி
புருசு தேய்த்தேன்.
"அடே..அடே
கன்னத்தைத் தேய்க்காதீர்களடா
கூசுகிறது."
கடவுள் குரல் கேட்கிறது
உள்ளத்தை
கசக்கிப்பிழிந்து
உள்ளத்தின் மீதே
அடித்துத் துவைத்து
உள்ளதை கொடி கட்டி
காயப்போட்டு காத்திருக்கிறேன்.
இது ஒரு யோகா
என்று சத்தம்போட்டு சொல்லிப்பார்க்கிறேன்.
அதற்குள் ஆம்புலன்ஸ்
"கீழ்ப்பாக்கம்"
இடிந்த சுவர்க் கோட்டைக்குள்
கூட்டிவந்து விட்டது.
____________________________________________________________
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
