சேயின் மகிழ்ச்சி
என் மார்பின் மீது ஏறி..
உன் பிஞ்சுக் கால்களை
தை ..தை ..என்று
உதைத்து..
என்னைக் குழந்தை ஆக்கும்
கண்ணா..
இந்தக் கால்களை
எடுக்க முடியாது..
உன்னால்..
என் இதயத்தில் நிலையாக
பதித்து விட்டதும் நீதான்..
உனக்கு என்றும்
நான் ஒரு சேய்தான்!