கண்ணீர்
அரும் பாடு பட்டாலும்
அரு சுவை உணவோடு
ஆண்டுதோறும்
கதிரவனை கூப்பிட்டு
படையலிட்டு பகிரிந்து உண்டோம்
எம் மக்களோடும் மகிழ்சியோடும்
எங்கள் வயலில் விளைந்த
நெற்கதிர்களை அன்று
அந்த நாள் பார்த்தேன்
எம் மக்களின் ஆனந்த கண்ணீரை
அந்த கண்ணீர் எங்கே?
ஆனால் இன்று
கன்னுக்கு தெரிவதெல்லாம்
கரண்டு கம்பியும்
கட்டிடங்களும் தான்
எங்கே என் பசுமை வயல் வெளிகள்
அங்கு நான் உறங்க வேண்டும்