சின்ன சிறகுகள்

கூண்டிற்குள் சிறகிருப்பது
சுலபமாகாது
விறகில்
காய் கனியாது
வானம் வேண்டும்
வானில் தானது நீந்த வேண்டும்

வீரனாய் இருந்து
கை கால்களை முடக்கி
வயிற்றுக்குள் தூங்க முடியாது

கயிற்றில் கட்டி
காற்றில் அனுப்பக்கூடாது

சிறையிருக்கும் வகை
சிறகொன்றும் செய்யவில்லை
வானையளந்தது வன்கொடுமையா
காற்றை கட்டிப் புரண்டது
கட்டாயமாய் குற்றமா
எழுத முடியும்
எழுத்து தாருங்கள் என்றதுவா

தன் கையிருக்க
காட்டை எரிக்கும்
அக்கினி குஞ்சு அதனின்
கைகளை உடைத்து
காது குடைய பயண்படுத்துவதா

தன் தலை அயர
சிறகு தலை அறுப்பதா
தான் பசியாற
சிறகின் இளமையை விற்ப்பதா
வண்ண வண்ண சிறகதனை
விதவையாக்கி பார்ப்பதா

ஆண் சிறகே
பெண் சிறகே
ஆடி ஓடி விளையாடு
அழகுச் சிறகே
நீ ஓய்ந்திருக்காதே சிறகே
கூடி விளையாடு சிறகே
கூடுமானால்
வியாபார உலகில் மாட்டிக் கொள்ளாதே
சிறகே
பாதகம் செய்வோரின்
பாதையில் தென்படாதே சிறகே
பயத்தில் உன் சிறகுகளை
மறைக்காதே

சிறகிருக்கும் பறவை நீ
பார்வை பொருளல்ல
நீயும் ஓர் பொருட்டு தான்
நிச்சயம் மறந்திடாதே

எழுதியவர் : Raymond (19-Jun-15, 12:24 pm)
Tanglish : sinna siragukal
பார்வை : 925

மேலே