நட்பாய் ஒரு காதல் !
விழிகளை மூடினால்
காட்சிகள் தெரியாது
என்பது பொய்யாகி
போனது என் நட்பு
நீயாகி போனதால்
என் இதயம்
என்னை கேட்கிறது
இது நட்பா காதலா
என்று கனவில்
கூட பதில்
அழகாய் வருகிறது
நட்பென்று மனம்மட்டும்
காதலுடன் நட்பை
நட்பில் காதல்
என்பது தவறா
உயிராய் நட்பை
நினைத்தால் சரியா
காதலுக்கும் நட்புக்கும்
நூலிடை வித்யாசம்
தான் வித்யாசங்கள்
மாறும் போது
நட்பு காதலாகும்
உண்மைதான் அது
சொல்லாமலே காதலாகும்
மனம் சொல்லாமலே சாகும்