என் கோடம்பாக்கத்து குந்தவை
கோட மாளிகையிலிருந்து கூடு மாற்றி எந்தன்
மாட மாளிகையில் குடியேறியது ஒரு பறவை!
பாட வாய் மலர்ந்து பாடியது தன் உறவை
வாடா மலரின் கானத்திலே கழித்தேன் என் இரவை!
கபடமிலா கனிமொழி பேசும் கலையழகு பட்சி
காண்பவர் கண்படும்படியான சிலையழகின் மாட்சி!
கற்பின் பெருமைக்கு கவரிமானின் கட்சி
வாலிப கண்களுக்கு வண்ண மயிலின் காட்சி
வடித்தெடுத்த இறை சிறப்பியே இதற்கு சாட்சி!