காகமும் குழந்தையும்

நன்கு
குழைக்கப்பட்ட
பருப்புச் சோறை
தன் பாட்டியிடமிருந்து
ஒவ்வொரு வாயாக
வாங்கியபடியே
மழலை மொழிந்திருக்கும்
ஒரு குட்டிப்பாப்பாவும்
இந்தக் காட்சியைப்
பார்த்தபடியே
கா கா என்று
கரைந்து கொண்டிருக்கும்
ஒரு காகமும்
ஒருவருக்கொருவர்
பேசிக்கொண்டிருக்கிறார்கள்
அவர்கள்
பாஷையில்

எழுதியவர் : குருச்சந்திரன் கிருஷ் (20-Jun-15, 7:32 pm)
பார்வை : 107

மேலே