கவிதையும் காதலும்
கவிதையே
காதலும் நீயும்
மூன்றெழுத்து ராகங்கள்
எழுத்துவடிவம் நீயென்றால்!
இதயவடிவம் காதல்
உன்னை
துருப்பாய் வைத்து
காதலை பிடித்துவிடலாம்
காதல் வலையில் நீயேவந்து
மாட்டிக்கொள்வாய்..
நீர் தான்
கொண்டப்பாத்திரத்தின்
வடிவைப்பெறும்-நீயும் அப்படியே!
காதல்
பாத்திரத்தில்
நீ காதல்கவிதை
நட்பெனும் பாத்திரத்தில் நட்புக்கவிதை
இதில்
காதல் பாத்திரமே
உனக்கு ஆஸ்கர் கொடுத்தது
காதலும்
நீயும் இரட்டைக்குழந்தைகளோ?
யாரை நினைத்தாலும்
தனிமையையே தருகிறீர்கள்
இருவருக்கும்
வேற்றுமை ஒன்றே!
காதல்
ஒருத்தியை மட்டும் ரசிக்க வைத்தால்!
நீ ஒவ்வொன்றயும் ரசிக்க வைக்கிறாய்...