காமமும் காதலும்

உலகம் உய்ய மனிதம் பெருக
காமம் வைத்தான் காமதேவன்
அதை புரிந்து கொள்வாய் பூவுலகே
தன்னிச்சையாக வருவது காமம்
தன்னையறிந்து வருவது காதல்
இதனையுணர்ந்து கொண்டால் வாழ்தல்
ஐம்புலச் சேர்கை கலவி
ஐம்புலமுணர்தல் காதல்
இருபக்க காசு போலே
காமமும் காதலும்
ஒன்றினையொன்று பொருந்தியது
ஒன்றையகற்றி யொன்றைப் பார்த்தால்
வீண் போகும் அதன் மதிப்பு
காமும் காதலும் இரட்டைக்கிளவியே
பிரித்தால் பிடிபடாது
அடுக்குத் தொடரென பிரித்துப் பார்த்தால்
முழுமைத் தன்மை விளங்காது
உடம்பைச் சார்வது காமம்
உயிரைச் சார்வது காதல்
உயிரின்றி யுடம்பில்லை
உடம்பின்றி உயிரில்லை
கொடியின் சேர்கை மரமென்றால்
காதலின் சேர்கை காமமன்றோ
பின்னிப் பிணையவே காதலும் காமமும்
போற்றிப் பணிவீர் இரண்டினையும்
உடம்பும் உயிரும் ஒன்றென வைத்தால்
காதலும் காமமும் ஒன்றே
நன்றே இதனை அறிந்து கெண்டால்
வையகம் போற்றிட வாழ்வீரே

எழுதியவர் : ரமணி (20-Jun-15, 8:09 pm)
பார்வை : 137

மேலே