பூவின் சகிப்புத் தன்மை
![](https://eluthu.com/images/loading.gif)
ஒருவன் மரத்தின் முன் நின்று
சிறுநீர் கழித்தான்
மரத்தின் பூ ,தனது முகத்தை
திருப்பிக் கொண்டது .
மற்றொருவன் திரும்பிய
பக்கம் வந்தான் குப்பையை போட,
மீண்டும்
முகத்தை திருப்பியது
திரும்பிய பக்கம்
இலவச கழிப்பறையும்,
குப்பைத் தொட்டியும்
நிறைய மது பாட்டில்கள்
பூ உதிர்ந்தது.