எனக்கு வலித்த கனவு

கற்பிணி மேகம் குழந்தை
மழை பொழிவதுக்கு இன்னும்
சில நொடிகள் தான் உள்ளது!!

இருண்ட இருட்டில்,
சூரியன் தூங்கும் ஓர் இரவில் - என்னையே எனக்கு அறிமுகம்
செய்த ஓர் நிசப்தம்!

மூளைக்குள் ஒரு நரம்பு
கவிதை எழுத சொல்லுதடி,
காகிதம்,பேனா இருந்தும்
என்ன எழுதுவது தெரியலடி!?

ஜன்னல் வழியாய் எதிர் வீட்டு
பார்த்திருந்தேன் - குழந்தை
ஒன்று ஜன்னல் மூடி தூங்கக்
கண்டதை காண்!!

மேகம் மழை பிரசவித்து அமைதி
கலைத்தது பார்!
இடிகளுடன் மின்னல் கொண்டு
வானை கிழித்தது காண்!!

இடமில்லாமல் வந்த குருவி
நனைந்து கொண்டே குழந்தை
மூடிய ஜன்னலில் இடித்தது பார்!!

உடல் நனைந்த குருவி சற்றே
ஓய்வெடுக்க என் ஜன்னல் திறந்தேன்!

இடிகள் இடித்த இசையில்
பயந்து மீண்டும் மீண்டும் முட்டியது குழந்தை மூடிய ஜன்னலை!!

தூக்கம் கலைந்த குழந்தை
சற்றே உற்று நோக்கியே
இருந்தது ஜன்னலை!!

மனத்துக்குள் ஒரு மௌனம்!!
அவள் திறந்து விடுவாள
ஜன்னலை!!

மௌனம் நீடித்துக் கொண்டே
இருக்க,மனதுக்குள் ஓர் பயம்
முட்டீயே இறந்து விடுமோ குருவி!!


பார்த்துக் கொண்டே இருந்த
நொடியில் அவள் திறந்த விட்டால்
ஜன்னலை!!

உடல் நனைந்து,களைத்த குருவி
அவள் அருகிலே அமர்ந்தது காண்!

மீண்டும் மூடி உறக்கம்
கொண்டால் குருவியுடன்!!

சற்றென்று மழை நின்றதில்,
ஜன்னல் வழியே சிறு நுழைவில்
குருவி பறந்ததை கண்டால் சிறுமி!!

மனம் நொந்தாள்!!
இதயத்தில் ஒரு சோகம் கண்ணீருடன் வெளி வந்தது அவளுக்கு!!

சொல்லாமல் பறந்த சிட்டை
நினைத்து மீண்டும் துடித்தாள்!!
வெந்தாள்!!நொந்தாள்!!

ஒரு சிட்டுகுருவி கூவியே
என் கனவு கலைந்தது காலையில்!!
ஆங்கே, என் ஜன்னல் வெளியே
ஒரு சிட்டு நின்றதை காண்!!!♥♥♥

எழுதியவர் : இஜாஸ் (21-Jun-15, 1:08 pm)
பார்வை : 169

மேலே