உலக தந்தையர் தின வாழ்த்துக்கள் தந்தை கவிஞர் இரா இரவி

உலக தந்தையர் தின வாழ்த்துக்கள் !

தந்தை ! கவிஞர் இரா .இரவி !

உறவுகளில் உன்னதமானவர் !
உறவுகளுக்காக உழைப்பவர் !

உறக்கம் குறைப்பவர் !
உணர்வில் குன்றானவர் !

பாசத்தில் இமயமானவர் !
பண்பில் சிறந்தவர் !

தன்னலம் மறப்பவர்
தன்குடும்ப நலம் காப்பவர் !

ஓடாய் உழைத்துத் தேய்பவர் !
ஒருபோதும் வருந்தாதவர் !

சேயுக்கு சிகரம் தருபவர் !
சிந்தையைச் செதுக்குபவர் !

உயர்ந்திட ஏணியானவர் !
உருகிடும் மெழுகானவர் !

ஒளிர்ந்திட எண்ணையானவர் !
ஒழுக்கம் கற்பித்தவர் !

முன்மாதிரியாக வாழ்பவர் !
முகம் என்றும் வாடாதவர் !

கடமையை கண்ணாக மதிப்பவர்
மடமையை மனதில் நீக்குபவர் !

உலகத்தை பற்றி உணர்த்துபவர் !
ஒய்வை என்றும் அறியாதவர் !

பாதை போட்டுத் தருபவர் !
பண்பை பயிற்றுவிப்பவர் !

பயம் நீங்கிடச் செய்பவர் !
பாசம் ஊட்டி வளர்ப்பவர் !

குழந்தைகள் மணக்க சந்தனமானவர் !
கூடி இருப்போர் போற்ற வைத்தவர் !

தாய் ஒரு விழி என்றால் !
தந்தை மறுவிழி என்பேன் !

.

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி (21-Jun-15, 3:44 pm)
பார்வை : 118

மேலே