விதியின் விளையாட்டு----------- ஊ வ கணேசன்

நாம் உண்ணும்
உணவில் உள்ள
ஒவ்வொரு தானியத்திலும்
அவரவர் பெயர்
எழுதி உள்ளது...
ஆம்....
உண்மை தான்...
இது
நபிகள் பெருமகனார்
நமக்கு அருளியது.....
ஆனால்
உழவன்
வயல் காகிதத்தில்
உழைப்பு பேனாவில்
வியர்வை மையூற்றி
ஒவ்வொரு தானியத்திலும்
ஒவ்வொருவர் பெயரையும்
ஒருசேர எழுதுகிறான்.....
தீர்ந்து போனது
மை.......
அவன் பெயரை
எழுதும் முன்.......!