என் காதல் அறிகுறி
உன் பெயரை எங்கு பார்த்தாலும் சிரிக்கிறேன் !
உனக்கு பிடித்த பாடலை நானும் ரசிக்கிறேன் !
உன் எஸ்எம்எஸ் காக அலைபேசியை பார்த்த வண்ணம் உள்ளேன் !
உன் பெயரை தோன்றிய இடத்தில் எல்லாம் எழுதுகிறேன் !
நான் குளிக்கும் போதும் உன் சிந்தனை!
உண்ணும் போதும் உன் சிந்தனை !!
வேலை செய்யும் போதும் உன் சிந்தனை !!
அதிகாரி திட்டும் போதும் கூட நீ பேசுவதாய் சிந்தனை!!
அதனால் தான் அவர் வசை கூட இனிக்கிறது !
உறங்கும் போதும் உன் சிந்தனை !
கனவிலும் உன் சிந்தனை தான் !!!
இதெல்லாம் தான் என் காதலின் அறிகுறியோ !!!