அன்புள்ள அப்பா -சகி
அப்பா ....
மழலையாக உன்மடி
தவழ்ந்து வளர்ந்தேன் .....
அன்று மழலையாக
தவழ்ந்து வந்துஉன்
பாதங்களை கட்டியணைத்ததை
இன்றும் சொல்லி மகிழ்கிறாய் ....
இன்றும் உன் பாசத்தால்
என்னை மார்பில் சுமகின்றாய் .....
நான் செய்யும் தவறுகளையும்
தாயாக மன்னிக்கிறாய் ....
நான் ஆசைக்கொண்ட
அனைத்துமே இல்லையென்று
சொல்லியதில்லை ........
இன்றும் என்எச்சில் சாதத்தை
நீ உண்ணும் தருணங்களில்
கண்ணீருடன் அகம் மகிழ்ந்து
ரசிப்பேன் உன்னதருகில் நின்று .....
வலியென்றால்
தாய்மடி சாய்வேன் ....
ஆதரவாய் என்றுமே
என் தந்தை மடிசாய்வேன் ....
கடவுள் எனக்கு கொடுத்த
வரம் என் பெற்றோர்கள்
அன்பு மட்டுமே ....