பெய்யெனப் பெய்யும் மழை

மழை வாசனை
உன் நுகர்வுக்கு எட்டியதும்,
அதன் துளியொன்றை
முகத்தில் தாங்கிக் கொள்ளவே
வாசலுக்கு வந்தாய் என்றும்,

தூரத்திற்கொன்றாய் விழுந்த துளிகள்
உன் பார்வைக்குள் வந்ததும்
இன்னும் இன்னும்
நெருக்கமாகிக் கொண்டிருப்பதாகவும்
சொன்னாய்..

உள்ளங்கைகளுக்குள்
கொஞ்சம் துளிகள் சேர்த்து
அதை மழையெனக் கொண்டு வா
வரும் போது என்றேன்..

இப்பொழுது வேண்டுமா என நீ கேட்டு
நான் ஆமோதித்த கனமே பெய்தது
இங்கும் அச் சாரல் மழை...

முதல் துளிகள் போலவே
நாமும் தூரமாயிருந்து
மழையின் பார்வைக்குள் வந்ததும்
இன்னும் இன்னும்
நெருங்கிக் கொண்டிருந்தோம்...

எழுதியவர் : புதிய கோடங்கி (22-Jun-15, 4:57 pm)
பார்வை : 308

மேலே