விசித்திரக்காற்றே 16

காற்றே.....
விரசாய் வீசி எனை உலுப்புகிறாய்
விரசம் களைத்து உணர்வை உசுப்புகிறாய்

விசும்பும் மனதில் சரதம் கூட்டி
வீரியம் குறைத்து சரண் ஆகிறாய்...

இலக்கு இல்லா சிறகாய் உன்னால்
பிணக்கம் கொண்டு நான் மிதக்க...
சாய்ந்து சருகாய் வீழ்ந்திடாமல்
வேகம் கூட்டி எழுப்புகிறாய்....

கதிர் தேடும் கமலம் நான்...
எதிர் பார்த்துக் காத்திருந்தேன்
புதிர் சொல்லும் விசித்திரமாய்
சதிர் புன்னகையால் மருள வைத்தாய்

வறண்ட பாலை நெடு மணலில்
மிரண்ட உயிராய் நான் பயணிக்க......
திரண்ட காரிருள் முகிலாய் பொழிந்து
இரண்டுபடாமல் என்னுள் கலந்துவிடு........

கவிதாயினி அமுதா பொற்கொடி

எழுதியவர் : வை.அமுதா (23-Jun-15, 2:46 pm)
பார்வை : 71

மேலே