நான்

நான் உயா்ந்தவன்
தாழ்ந்தவனைக் கண்டபோது...
நான் தாழ்ந்தவன்
உயா்ந்தவனைக் கண்டபோது...
நான் கடவுள்
கல்லை பாா்த்து சிாித்தபோது...
நான் பிச்சைக்காரன்
கல்லை கை கோா்த்து பாா்த்தபோது...
நான் மனிதன்
மிருகத்தை அழித்தபோது...
நான் மிருகம்
மனிதனை நாவால் அழித்தபோது...
நான் பிறக்க போகின்றேன்
தாயின் கருவறையில் இருந்து...
நான் கருவறைக்கு போகின்றேன்
உலகம் என்ற கருவறைக்கு...
எனது உண்மையான பிறப்பு
மரணத்தில் முடிகின்றது...

எழுதியவர் : லெகு (24-Jun-15, 10:04 pm)
சேர்த்தது : ஹரவேல்
Tanglish : naan
பார்வை : 62

மேலே