சாதி ஓர் சதுரங்கம்
சாதிகள் ஓர் சதுரங்கம்
இதில்
மக்களே சிப்பாய்கள்
சாதிகளே ராஜாக்கள்
சாதிதலைவர்களே மந்திரிகள்
கறுப்பு வெள்ளை சாதிகள்
மோதிக்கொள்கையிலே
சிப்பாய்களே முதலில்
உயிர்விடுகின்றனர்
ராஜாவை காக்க..!
சிப்பாய்களை முன்நிறுத்தி
மந்திரிகள் பாதுகாப்பாய்
இருப்பார்கள்-சிப்பாய்களை
ஊக்கப்படுத்திக்கொண்டு.!
சிப்பாய்களே விழித்துக்கொள்ளுங்கள்...