சாதி எனும் வலை

சாதிகள்.!
எந்தப்பக்கமும் பிடிக்க முடியாத
உடைந்த கண்ணாடித்துண்டுகள்
அதை தொடாமல்
தாண்டிசெல்வது நல்லது
கையில் எடுத்துப்பிடித்தால்
காயம் அடைவது உறுதி
சாதிகள் பஞ்சு
மெத்தையைப்போல்
சுகமாக தெரியலாம்
சிக்கிக்கொண்ட பின்னரே
அது சிலந்திவலை என்பது புரியும்...