மலரே மௌனமா

ஆதவவிழிகளுக்கு நாணித்தவளே
சிறைவிடுத்த இமைகளுக்கு
பனிநீர் ஒற்றிவிட
உன் இதழ்கள் துணையில்லை
அரும்பி நனைந்து
முகையாகி மொக்குள் நறும்பி
முகிழ்ந்தெழுந்தாய்
மொட்டென புடைந்த"போதே"
மலர்ந்து மடந்தையின் மை ஈர் உடுத்தாது
பொதும்பர்ப் பெற்று
பொம்மலுற்று பின் செம்மலுற்றாய் ஏனோ
மலரே நீ மௌனமாய்

அனுசரன்

எழுதியவர் : அனுசரன் (25-Jun-15, 2:42 am)
பார்வை : 183

மேலே