பிரிந்து விடாதே பிரியமே

புகை பிடித்தேன்
உன் சுவாசத்தை உணரும்வரை
மது அருந்தினேன்
உன் மனதை அறியும்வரை

இனி மாட்டேன்
என்னுள் இருக்கும் உன்னை
மாசு பெற விடமாட்டேன்

இழப்பதற்கு ஒன்றும் இல்லை
என்று இருந்தேன்
நீ என்னுள் குடிவரும் வரை
எல்லாமே இழந்தது போல் தோன்றும்
நீ என்னை பிரிந்து சென்றால்

வாழ மனதுண்டு
என்னுடன் சேர்ந்து வாழ
நீ உண்டா?
பதில் கூறு
என் பாதியே
உன் பதிலில்தான்
என் மீதி வாழ்க்கை தொடருமா என்று தெரியும்
என் பிரியமே.

எழுதியவர் : jonesponseelan (25-Jun-15, 2:22 pm)
பார்வை : 145

மேலே