உன் அன்புக்கு அடிமை நான்

நீ இல்லா என் நாட்கள்
நிலவில்லா வான் வெளியாய்...
உன் தடம் காணா(த) என் நிமிடம்
நீர் காணா(த) மீன் நிலையாய்...

விழிகளில் தேடல்கள்,
உனக்காக மட்டுமே...
உயிாினில் உளறல்கள்,
உனை எண்ணி மட்டுமே...

இன்னிசையும் தோற்றுப்போகும்
புன்சிரிப்போடு நீ பேசினால் ...
எத்திசையும் மோட்சம் காணும்
என் எதிரில் நீ தோன்றினால்...

உன் ,
அழகினில் அமிழ்ந்து போனேன்...
அறிவினில் வியந்து நின்றேன்...
அன்பினில் மொத்தமாகவே - நான்
அடிமையாகி மெய் மறந்தேன்...!

எழுதியவர் : கவிப் பிரியை - Shah (25-Jun-15, 8:37 pm)
பார்வை : 1676

மேலே