அழகிய படகு
காதல் கொள்ள நல்ல நேரம் வேண்டாம்
அது சுப முகூர்த்தம் பார்த்து வருவதில்லை
சும்மா இருக்கும் மனங்களிலே
சுகமான சுமை போல மெல்ல மெல்ல
வேரூன்றி விருட்சமாக படர்ந்து விடும்
அது நல்லதொரு அன்பு விருட்சம் தான்
தன் இனம் மதம் மொழி சொந்தம் அனைத்தையும்
ஒதுக்கி விட்டு வளருது பார்
அந்த காதலே வெற்றி கொள்ளும்
உண்மைக் காதலும் அதுதான்
அதை சுற்றி சூழவுள்ள சொந்தம் எல்லாம்
போற்றும் விதத்தில் காதல் விருட்சம் வளர்ந்து விட்டால்
காதலர்கள் ஆனந்த படகில் உலகையே வலம் வருவார்கள்
காதல் கொள்ள காசு தேவை இல்லை
காலம் தேவை இல்லை காரணம் தேவை இல்லை
காதலர் கொள்ளும் இலட்சியம் ஒன்றே
காதலை ஜெயிக்க வைக்கும்
பட்டம் பதவி பந்தா பார்த்து காதல் வருவதில்லை
காதல் வருவது இயற்கையின் நியதி
இருவர் செல்லும் அழகிய படகு காதல்