அரசாங்கம்

விலைவாசியை உயர்த்திய மனிதா
நீ உயிர்வாசியை மறந்ததேன்
விதைபவர்கள் ஊர்மக்கள்
விலை நிர்ணிப்பது அரசு
பயிரிடுபவர்கள் நிலமக்கள்
பணம் பறிப்பது அரசு
பட்டினியால் தவிப்பவர் ஊர்மக்கள்
பதுக்கி வைத்து வாழ்கிறது அரசாங்கம்
பட்டிகாட்டில் வசிபவர்கள் ஊர்மக்கள்
பட்டணத்தில் வசிக்கிறது அரசாங்கம்
பணமின்றி வாழ்பவர்கள் ஊர் மக்கள்
குணமின்றி வாழ்பவர்கள் அரசு அதிகாரிகள்
வாக்களித்தும் வாயடைத்து நிற்பவர் ஊர் மக்கள்
வாரி வாரி வாக்குறுதிகளை அளிக்கிறது அரசாங்கம்
வாரி விதித்து வாரி கொள்கிறது அரசு
வாழ்வதற்கு பணமும் இல்லை இங்கு
விதி முறைகள் நாளும் இயற்றும் அரசு
வினைகளை தாங்கமுடியாத ஊர் மக்கள்
வினா எழுப்பும் விந்தை மனிதனாயினும்
விதி முடித்து விடை அளிக்கிறது அரசு
வானம் என்றும் ஒரே வடிவில் இருப்பதில்லை
வாழ்கை என்றும் ஒரே வழியில் நடப்பதில்லை
வானமும் மாறும் நம் வாழ்க்கையும் மாறும்
வாசலிலே காத்திருப்போம் வருங்காலம்
வரும் வரை எதிர் பார்த்திருப்போம்

எழுதியவர் : சுருதி கீர்த்தி (13-May-11, 2:11 pm)
பார்வை : 323

மேலே