தேசத்தின் கைகளுக்கு நூல் கட்டுவோம்
அன்புபடி அறிவுமடி செறிவுடனே பெருக
ஆற்றல்கொடி ஏற்றும்படி மண்டலமே மலர
இல்வாழ்வுப்படி நல்வாழ்வு செய்யும்படி இல்லோர் வளர
இல்வாழ்வின்படி விருந்தோம்பும்படி மனமெல்லாம் கொள்ள
ஈதல்படி இனிமைசேர்க்கும்படி இளையோர் எவரும் இணைய
உழவுப்படி உலகக்கொடி உயர்த்திடவே உதவ
ஊழின்படி சூழும்தீமைமுடி வசந்தங்கள் வருத்த
அடக்கபடி கோபம்முடி தடங்கல்கள் தகர்க்க
நீரின்படி ஊரின்வழி உலகம் ஏறி செல்ல
தவத்தின்படி வருத்தக்கொடி நோய்கள் நொறுக்க
கேட்டல்படி கற்கும்செடி சான்றோரென மாற
பொருள்படி உலகமடி உண்மையோடு பொருள் சேர்க்க
ஒழுக்கப்படி உயர்வுபடி ஊருலகம் கட்ட
வாய்மைபடி பொய்மைஇடி இடம் விட்டகல
துறவுபடி ஆசையுறவுமுறி பற்றுகள் பட்டுப்போக
பொதுமறைப்படி முறைப்படி இந்தியர் நாம் திழைக்க
அரசாணைப்படி திருக்குறள் தேசிய நூலாகும்படி உழைக்க
யாவரும்கூடு(று)ம்படி சபதமேற்றபடி இந்தியர் நாம் ஜெயிக்க
தேசத்தின் கைகளுக்கு திருக்குறள் நூல் கட்டுவோம்.