நானும் அன்னையே
நானும் அன்னையே.!
என் கவிதை குழந்தையை
இதய கருவறையில்
சுமக்கும்போது.!
நானும் தந்தையே.!
பிரசவித்த குழந்தையை
எழுத்து தளம் என்ற
பள்ளியில் சேர்க்கும்போது
நானும் குருவே.!
அதன் பொருள் நிறை
குறைகளை அறிந்து
திருத்தும் போது.!
நீங்கள் தோழர்களே.!
என் கவிதை குழந்தையை
ஊக்கப்படுத்தும் போது..