பூர்வீக சொத்து
![](https://eluthu.com/images/loading.gif)
பலருக்கு பூர்வீகம் காயம்தான் - அனால்
சிலருக்கு மட்டுமே ஆதாயம் !
ஒருவன் ஏற்றம் பெற்று விடுவான்
மற்றொருவன் ஏமாற்றப்படுவான்
வாய் வார்த்தையை நம்பி -இங்கே
தன பங்கைகூட வாங்காமல்
அன்று எழுதி கொடுத்துவிட்டு - இன்று
தலை எழுத்து மாறி உலகில் பலர்
உடன் பிறப்பே ! இங்கு கடன் பிறப்பு
பூர்வீக சொத்து புத்திசாலிக்கு கிடைத்துவிடும்
ஏமார்ந்தவன் என்றுமே இறுதி வரை
கடன் பிறப்புதான் !
ஸ்ரீவை.காதர்