முதியோர் இல்லம்

தன் ஆசைகளை எல்லாம் கருக்கிவிட்டு
பிள்ளைகளின் எதிர் கால கனவுகளை
நனவாக்க இறுதிவரை போராடி...........

நல்ல சாதனையாளர்களாக
உலகத்தின் முன் நிறுத்திவிட்டு

இன்று இந்த முதியோர் இல்லத்தில்
இவர்கள் தள்ளாடும் நினைவுகளுடன் .......

இன்னும் இவர்கள் செய்த குற்றம் தான்
என்ன ?

நாளைய இதே விடியல் நமக்குந்தான்
விடியும் என்பதை மறந்து விடாமல்
உன் மூளையில் மறு பதிபேற்று !!

ஸ்ரீவை.காதர்.

எழுதியவர் : ஸ்ரீவை .காதர் . (14-May-11, 12:50 pm)
சேர்த்தது : கவிஇறைநேசன்
பார்வை : 288

மேலே