தனிமை
கசக்கிக் கசக்கி உன் மொழி
உணர முயன்று, தோற்று,
மூளை சுளுக்காகியேவிட்டது.
கிருமிகளின் தொல்லையால்
கணணிகூட எச்சரிக்கிறது.
கண் சிமிட்ட மறுத்துவிட்டாய்,
மகம் மலர வெறுத்துவிட்டாய்,
வார்த்தை வரிகள் கலக்க
அனுமதியில்லை,
இனி எதற்கு ஐம்புலன்கள்.
புலம் பெயர்ந்தபின் புரிதல் எதற்கு.
தனிமை மட்டுமே இனிமை.