வேதியியலின்விந்தைகள்-போட்டி

வேதியியலின் பசுமை காண
வெள்ளி மின்னல் அழகி
மிளிருகின்றாள்!
மிளிர்ந்த பூவில்
மின்னலின் மதலைகள்
புவியின் கரந்தொட்டு
கை குலுக்குகின்றன!
மழைப்பூவாய்
சிணுங்கிய சிணுக்கலில்
உதிர்ந்த ஆக்சிஜன் ஹைட்ரஜன்
மகரந்தங்கள் நைட்ரிக் அமில
வெள்ளி நீரோடையாய்
புவிதாது உப்பு தோழர்களுடன்
நைட்ரேட் விளையாடப்
புறப்பட்டு விட்டனர்!
புவி மகளின்
அரவணைப்பால் தாவரக்குழந்தை
மின்னல் மதலைகளுடன்
உற்சாகப் புரோட்டீன் கொண்டாட்டம்!
விளைச்சலை அறுவடை செய்து
பசுமைச் சமுதாயம் உருவாக்க
எங்கே சென்றது
அடுக்கக நெஞ்ச இரும்பு
இயந்திர மனிதர்கூட்டம்?
லட்சுமி

எழுதியவர் : லட்சுமி (1-Jul-15, 8:50 am)
பார்வை : 75

மேலே