புல்லாங்குழலின் மெளன விரதம் -முஹம்மத் ஸர்பான்

பூக்களின் வாசனை புற்களுக்கு ஆகாமலானால்
இலையில்லா மரத்தில் பூக்கள் மலருமா?
சாக்கடை அள்ளும் தோழன் இல்லாவிட்டால்
தூய காற்று மண்ணில் உயிரோடு வாழுமா?

கருவில்லாத மலடி தாய் மார்போடு
தத்துப்பிள்ளை தூக்கி வளர்த்தால் பாவமா?
பிச்சையை வெறுத்து பாதணி திருத்தும்
கைகள் சமுதாய பார்வையில் ஈனமா?

சிலைகள் சாலைகள் மிறிபடும் கற்களை
பார்த்து நகைத்தால் இறந்தகாலம் மறந்துவிட்டது
பணக்காரன் கால்கள் கழுவுவதற்கு தயாரிக்கப்பட்ட
பன்னீர்.., குடிசை வீட்டு ஏழையின் கண்ணீர்.

நீரில் மிதக்கும் மீன்கள் தரையில் வீழ்கின்றன.
மண்ணில் நடக்கும் மனிதன் அலையில் மூழ்கிறான் .
மனிதன் வாழும் பாவப்பட்ட அகிலத்தை வெறுத்து
ஐந்தறிவு புத்திஜீவிகள் நெய்ந்த வாசல் கானகம்.

பணமெனும் வெற்றுக்காகிதம் உயிர் வாழ்கிறது
பாமரன் திசுக்களும்,உயிரும் இரையாகிறது.
பல்கலைக்கழகம் விபச்சாரத்திற்கு ஒத்திகை மேடை.
பட்டம் பெற்ற ஆண்களும் பெண்களும் நடனக்காரர்கள்.

நான்கு வேத ஆலயங்களுக்கும் பூட்டுகள் போடப்பட்டன.
மதுபானத்தையும் களியாட்ட நிகழ்வையும் தரிசிக்கின்றான்.
நூறில் ஒருவன் தவறைக்கண்டும் ஊமையாகிறான்.
மனிதனால் காட்டு மூங்கில் குழலும் மெளனமாகிறது.

எழுதியவர் : முஹம்மத் ஸர்பான் (2-Jul-15, 12:29 am)
பார்வை : 173

மேலே