பூங்கொடியே

அணைப்புகளும் இணைப்புகளும்
பெற்றெடுத்த அரும்பே
காற்றுகளும் இனித்திடுமே
தேனிக்கு கரும்பே
பனி வந்து உரசும் பொது
நாணங்கள் பல நூறு
உன் அழகு வெள்ளித்தேரு
நனைந்து நனையாகிறாய் பாரு
பத்து எண்ணிப் பார்த்து விட்டேன்
மேட்டுக் கூடப் போட்டு விட்டேன்
முத்துப் போல் முத்தாகும் முகையே
மயிலுக்கு நீ தோகையே
படித்திட நீ பூவின் மறை
முடித்திட பூ உனது நிறை
வெடித்திடும் முன் மொக்குளாய் நீ
உன்னை ரசிக்கும் மக்களாய் நான்
விரும்பியே அரும்பிடும்
சிரித்துக் கொண்டே விரிந்திடும்
போதாகும் போது
உனக்கெங்கே ஈடு ?
வலியோடு வழிசெல்லும்
மணமுள்ளே மனமுண்டு
விழிகளைக் கடத்திடும்
முகிழுக்கு நிறமுண்டு
மலர் மலர்ந்து கொடிப் படர்ந்து
அலர்ந்திடும் பூங்கொடியே
உதிராமல் உதறாமல்
என்றும் நீ இருந்திடவே
உனக்கு எனது இனிய
பிறந்த நாள் வாழ்த்துகள்