ஒன்றாய்ப் பயணிப்போம்
எங்கோ பிறந்தோம்
எங்கோ வளர்ந்தோம்;
பள்ளியில் சந்தித்தோம்
நண்பர்கள் ஆனோம்.
விதிநம்மை இணைத்தது
ஒவ்வொருநா ளும்நட்பை
வளர்ப்போம்; என்றென்றும்
நீயே என்நண்பன்.
கல்லூரி யில்இணைந்தோம்
அக்காள்தங்கை யைமணந்தோம்;
உறவிலும் ஒன்றானோம்,
நட்பிலொன்றாய்ப் பயணிப்போம்.