எனது கிறுக்கல்கள்

மழலை கிறுக்கினால் புதுமொழி
மங்கை கிறுக்கினால் கனிமொழி

கண்கள் கிறுக்கினால் ஓவியம்
கண்ணீர் கிறுக்கினால் காவியம்

கைகள் கிறுக்கினால் கதை
கால்கள் கிறுக்கினால் பாதை

பணம் கிறுக்கினால் லஞ்சம்
பகை கிறுக்கினால் வஞ்சம்

வாகனம் கிறுக்கினால் விபத்து
வாழ்க்கை கிறுக்கினால் தோல்வி

மனமின்றி கிறுக்கினால் தேர்வு
மனதிற்குள் கிறுக்கினால் காதல்

கடவுள் கிறுக்கினால் தலைவிதி
அதைமாற்றி கிறுக்கினால் அது மதி

நிலத்தை கிறுக்கினால் விவசாயம்
நீரில்மது கிறுக்கினால் விஷசாயம்

நிலைகெட்ட மாது
கிறுக்கினால் விபச்சாரம்

இந்நிலை மாறிடவே
நம் பார்வை கிறுக்களில்
வேண்டும் விசாலம்

இந்த கிறுக்கல்கள் தானோ கவிதை.!

எழுதியவர் : பார்த்திப மணி (3-Jul-15, 2:06 pm)
Tanglish : enathu kirukkalkal
பார்வை : 130

மேலே