பட்டம்
காகிதமே
நீ என்
பிறப்பும் இறப்பும் பதித்துகொள்கிறாய்!
கல்வியில்
சாதி சான்றிதழ் ஆகிறாய்!
கருணை தொகை வழங்க
வருமான சான்றிதழ் ஆகிறாய்!
படித்துமுடித்தவுடன்
பட்டமாக கையில் கிடைக்கிறாய்!
இந்த மகிழ்ச்சியெல்லாம்
வேலை கிடைத்து என் கையில் -நீ
பணமாக வேண்டும் என்பதற்காகதான்,
ஆனால்
நீ சிபாரிசு என்பவனின் கையில்
சிறைப்பட்டு இருக்கிறாய் என்று தெரிந்திருந்தால்
நான் உன்னை வெறும் பட்டமாக மட்டுமே
விண்ணில் பறக்க செய்திருப்பேன் .................
என்றும் அன்புடன்
அ. மணிமுருகன்