எழு தோழா எழு - உதயா

முடியாது என்னால்
முடியாது என்றே
முரண்டு பிடிக்காதே
என் தோழா ..!
முடியும் என்னால்
முடியும் என்றே
முயன்று பாரடா
இப்பாரே உன் காலடியில்
முடங்கி கிடக்கும்
என் தோழா ...!

முத்தாக உருவத்தை பெற்றும்
முட்டாளாய் இருந்து கொண்டு
மூதேவியாய் வாழும்
மடையன் இல்லையடா நீ ..!
உன் முன்னோரின்
சரித்திர ஏட்டிற்கு
சலங்கை கட்ட
பிறந்தவனடா நீ ...!

எக்கணமும்
அழுதுகொண்டே இருக்க
பேதையில்லையடா நீ ...!
எக்காலமும்
உன்னை நினைக்க மறவா
மேதையாகப் பிறந்தவனடா நீ ...!

ஒவ்வொருமுறையும்
நீ எழும்போது
விழுவாய் விழுவாய்
என் தோழா ...!
ஆனால் அகிலமே
ஒரு நாள் உன்னை
வியந்து பார்க்க
நீ பலமுறை
எழுவாய் எழுவாய்
என் தோழா ..!

என்னடா பக்குறாய்
எதையடா நினைக்கிறாய்
ஏனடா தயங்குறாய்
நடடா நடடா நடடா ..!
சாதனை ஏட்டிலெல்லாம்
உன் கால் தடங்களை
பதியடா பதியடா பதியடா ...!

நம்பிக்கை என்பதை
நான்காக்கு...!
இந்நான்கையும் உன்னுடலுக்கு
இரு கை காலாக்கு ..!
ஊனம் என்பது உனக்கில்லை
இனி தொடரும் உன் பயணம் பல்லாக்கு ..!

எழுதியவர் : உதயா (4-Jul-15, 11:15 am)
பார்வை : 628

மேலே