வேதியியல்

தனிமங்களை தொகுத்த மேண்டலிபே
மனிதங்களை தொகுக்க வழி சொல்லும்
தர ஆய்வு செய்யும் அறிஞர்களே
அற ஆய்வு செய்ய கற்றுதாறும்
காற்றெல்லாம் கரியன் கலப்படம்
உணவெல்லாம் உரக் கலப்படம்
ஜீவநதி எல்லாம் கூவநதியானதே!
கரியன் அவன் உயிர்வளி ஒன்றில் கலந்தால்
மனித குளத்தின் உயிர்வளி பிரியுமே!(co)
கரியன் அவன் உயிர்வளி இரண்டில் கலந்தால்
ஞாலத்தின் வெப்பமது உயர்ந்திடுமே!(co2)
உறைபனி உருகி ஆழி அதன் ஆரம் அதிகரிக்கும்
வான் தாண்டி ஆய்வு செய்யும் அறிஞர்களே
இந்த மண் அழியும் மார்கத்தினை தடுபிரோ!
விரைந்து செல்லும் ஊர்திதனை கண்டறிந்தீர்
அதன் புகையால் விரைந்து செல்லும் மானுடத்தை காக்க வழி அறிவீரோ!
மும்மாரி பொய்ததெல்லாம் அக்காலம்
அமிலமாய் மாரி பொய்கிறது இக்காலம்
அதுஉம் பொய்த்துவிடும் வருங்காலம் .
மனதில் கரைந்த மாசு கரைக்க
நதி செல்லும் மனிதர்
அதில் கரைந்த மாசு கரைக்க வழி அறிவாரோ !
மண்ணரிப்பு ஆனதனால்
நெல்லரிப்பு போனதே
நெஞ்செரிபாய் உள்ளதடா
விஞ்ஞானத்தை பார்க்கையிலே !
வினை எல்லாம் சமன்பாடு அடைகிறது
மனித சமன்பாட்டை கண்டிலேன்.
வினைபடுபொருளெல்லாம்
முக நூலிலும் வாட்ஸ் ஆப்பிலும் காலம் கழிக்க
விளைபொருளை 2020 ல் எதிர்பார்க்கிறார் ஓர் அறிஞர்!
சகபிணைப்பு செய்து நல்ல
மனிதம் வளர்ப்போம்
ஈதல் சகபிணைப்பு செய்து
எதிர் கால சந்ததி காப்போம் .