புன்சிரிப்பு

நகை மென்னகை அது புன்னகை
அழகுப் புன்னகை செல்வத்தை அள்ளி வரும்
பெண்ணின் பெருமை விளங்கும்
ஆழமான சிரிப்பு புன்னகை
இந்த நகைப்பில் மயங்காதோர் இல்லை
ஒரு மனிதனின் தோற்றத்தில்
மட்டுமல்ல அவன் சிந்தும் புன்னகையில்
அவன் குணம் தெரிந்து விடும்
புன்னகைக்கும் முகம் எல்லாம்
பூவாக மலர்ந்து விடும்
அன்பிலே அணைப்பிலே ஆசையிலே
சிந்தும் புன்னகை அர்த்தமுள்ளவை
புன்னகை ரேகை முகத்தில் மறைந்து விட்டால்
பார்க்கும் முகம் எல்லாம் இருள் அடைந்து விடும்
ஒரு மனிதனின் புன்னகையும் களையும்
அவனை எங்கேயும் எப்போதும் உயர்வாக நினைக்கத் தோன்றுகிறது
அவ்வளவு மாபெரும் சக்தி இந்த புன்சிரிப்புக்கு உண்டு
பணம் வேண்டாம் பொருள் வேண்டாம்
புன்னகை ஒன்றே போதும்
களைப்பும், இளைப்பும், வறுமையும் , நோயும் கூட பறந்து விடும்
புன்னகையின் வலிமை எந்தப் பொன் நகைக்கும் இல்லை
அழகு சாதனப் பொருள்களாலோ ஆடை ஆபரணங்களாலும்
அழகு வந்து விடாது
இந்தப் புன்னகை மட்டுமே அழகையும் அன்பையும்
வாழ்நாள் முழுவதும் செல்வச் சிறப்பையும் தரவல்லது
புன்னகைக்கு ஈடான நகை வேறில்லை
புன்னகை அற்ற முகம் பாலைவனம் போல் ஆகிவிடும்
சிரிப்புக்கு சகிப்புத் தன்மை அதிகம்
கோபத்தை வெல்லும்
கொதிக்கும் மனதிலும் குளிர்ச்சியை தரக் கூடியது
இந்த அழகிய புன் சிரிப்பே ,
புன்னகை தவழும் மதி முகம் பூரண நிலவு,
எதையும் தாங்கும் சக்தி இந்தப் புன்னகைக்கு மட்டுமே
புன்னகைத்து விடு
பொறுமை நம்மை வாரி அணைத்துக் கொள்ளும்

எழுதியவர் : பாத்திமா மலர் (7-Jul-15, 2:06 pm)
Tanglish : punsirippu
பார்வை : 674

மேலே