வெற்றிப் படிகள்
நீ செல்லும் வழியில்,
அகலத் திறக்கும் ஒவ்வொரு கதவுக்குப்
பின்னாலும் திறக்கும் சக்தி வேறு உண்டு;
வாழ்வில் முன்னேற உன் முயற்சியும் வேண்டும்,
உடன் துணை வர ஆன்மீக பலமும் வேண்டும்;
நியாயமான முயற்சி, நேர்வழி, திறமை
வெற்றிப் படிகள் ஏணியாய் ஏற்றம் தரும்.