வேலை வாய்ப்பு

நம் நாட்டில்
வேலை பார்த்து சம்பாதிக்கிறவனையும்
வேலை செய்யாமல் ஏமாற்றி சம்பாதிக்கிறவனையும்
இவர்கள் மத்தியில்
வேலை கிடைக்காமல் திண்டாடுகிறவனையும்
பார்க்கிறோம்

நம் நாட்டில்
வலை போட்டு தேடினால்
மீன் கிடைக்கிறது
அனால் வலைத்தளத்தில்
தேடி தேடி பார்த்தாலும்
படித்த படிப்புக்கு
வேலை கிடைப்பதில்லை

நம் நாட்டில்
படிக்க வாய்ப்பு உண்டு
ஆனால் படித்து முடித்த பின்
படித்த துறையில் வேலை இல்லை
இதனால் தானோ
நம் நாட்டில் கற்ற கல்வியை
அயல் நாட்டிற்கு சென்று கக்குகிறார்கள்
நம் குடிமக்கள்

நம் நாட்டில்
கற்ற கல்விக்கு
நம் நாட்டிலே எப்பொழுது வேலை கிடைக்கிறதோ
அப்பொழுது இந்நாடு வல்லரசு நாடாகும்.

எழுதியவர் : jonesponseelan (7-Jul-15, 5:41 pm)
Tanglish : velai vaayppu
பார்வை : 541

மேலே