மதுவிற்கு பழக்க படுத்திய மழலையின் அழுகுரல் 555

மழலை...

தாய் வழி உறவுகள்
தாய்க்கு சமம் என்பார்கள்...

தாய் மாமனோ தீய வழியில்
என்னை தள்ளுகிறான்...

என் கை பிடித்து உலகை
சுற்றிகாட்ட வேண்டியவன்...

என் கையில் மது
கிண்ணத்தை கொடுத்து
போதையில் தள்ளுகிறான்...

பேனா பிடித்து தாய்மொழி எழுத
வேண்டிய என் கைகளில்...

மதுகிண்ணத்தை
பிடிக்கவைத்துவிட்டான்...

மது என்றால் என்னவென்று
கேள்விகூட கேட்க
தெரியாத என்னிடம்...

மதுவை
குடிக்கவைத்துவிட்டான் என்னை...

இப்படி என்னை
பார்த்த எத்தனை
அம்மாக்கள் அக்காக்கள்
சொல்லி இருப்பார்கள்...

பிஞ்சுலேயே
பழுத்துவிட்டது என்று...

என் பச்சிளம் ரத்தத்தில்
சாராயத்தை கலந்துவிட்டான்...

சாராய வாடையை என்னையும்
சுவாசிக்க வைத்துவிட்டான்...

எப்படி சுத்தம் செய்வேன்
என் ரத்தத்தை நான்...

ஆண் மகனாக பிறந்ததால்
என்னை மதுவிற்கு
பழக்கபடுத்தினானோ...

பெண்ணாக பிறந்திருந்தால்
விபச்சாரியாக்கி இருப்பான்...

என்னை இனி இந்த சமூகம்
குடிகாரன் என்றுதான் பார்க்குமோ...

நான் தெரிந்து செய்த தவறா...?

தெரியாமல் செய்த தவறா...?

தெரியலையே கடவுளே
என்னை மன்னித்துவிடு.....

[இது எல்லோர் தாய் வழி உறவுகளுக்கு அல்ல].....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (7-Jul-15, 6:42 pm)
பார்வை : 90

மேலே