அந்த ஒரு நாள்
கருவறை
கல்லறையாய் மாறி இருக்கும்
ஒரு நொடி நீ பெரண்டுபடுத்ததால்
வாசல் தெரியாமல்
காலால் நீ உதைக்க !
வலி தாங்காமல் என் தாயவள் கதற !
ஈருயிர் படும்பாட்டை
ஓருயிராய் என் தகப்பன் திகைக்க!
அவர் கை பிடித்த எனக்கு
ஈரக்கொலை வேர்க்க!
அலறல் சத்தம் கேட்டு ஆயா வந்தாள்...................!
கண்ணாடி தட்டுக்குள் இருக்கும் பீங்கான்! போல்
உன் முகம் பார்த்த பின்புதான்
நான் குடித்த பால்டப்பா கைமாறிபோனது
பங்குபோட பங்காளி வந்து விட்டான் என்று
பசிக்கு சோறு கேட்ட முதல் தருணம் தான்
அந்த ஒரு நாள்?