உறவு ஒன்று உயில் எழுதுகிறது - 15

தேடி வரும் யாருக்கும் நீ
தெரிந்து விடக் கூடாதென்று
மறை முகமாய் உன்னை அறிமுகம் செய்கின்றேன்.
இதனால் உனக்கு எந்தச் சிக்கலும் இல்லை
ஆனால்
உனக்கு வரும் விக்கலுக்கு நான் பொறுப்பல்ல...

காலத்தை வெல்லும்
காவியங்களில் உன்னை
வாழச் சொல்கிறேன். - நீயோ
வாசகர்களின் வரிசையில் நிற்பதே
வசதி என்கிறாய்.

கோபுரத்தில் வைத்து உன்னை
கொண்டாட நினைக்கின்றேன். - நீயோ
பக்தர்களின் வரிசையில் நிற்பதே
பரவசம் என்கிறாய்.

தேரில் உன்னை அமர்த்தி
வடம் பிடித்துக் கொண்டிருக்கிறேன் - நீயோ
இறங்கிதான் போவேனென்று
அடம் பிடித்துக் கொண்டிருக்கிறாய்.

உன்னருகில் இருந்தவரை எழுதிவிட்டேன்.
எழுதுவதற்காக இன்னும் சிலகாலம்
இருந்துவிட்டுப் போய் விடுகிறேன்.

உன்னை பொத்திப் பாதுகாக்க முடியாமல்
புழுதிக் காட்டில் உன்னை விட்டுப் போவதாய்
புலம்புவதை தவிர வேறு
என்ன செய்து விட முடியும் என்னால்...

எழுதியவர் : parkavi (7-Jul-15, 9:51 pm)
பார்வை : 88

மேலே