அருமைகள் மறக்கின்றோமோ

இளவய தென்ற போதே
=இயற்கையின் அழைப்பைக் கேட்டான்!
வளமது விவசா யத்தில்
=வாய்க்குமேல் உலகு வாழும்!
பழங்கதை இதுவா காது!
=பார்முதல் தொழிலென் றெண்ணிக்
களமென விவசா யத்தைக்
=கைகளில் எடுத்துக் கொண்டான்!

நூறுகன காம்ப ரத்தின்,
=ரகங்களை கண்டு தந்தான்!
நூறுரக சவுக்கு கண்டான்
=நூலறி வில்லாப் போதும்!
பேர்,வேங் கடப திக்குப்
=பதுமவிரு தளித்த போது
ஊரதைக் கொண்டா டாமல்
=ஒதுக்கினார் ஊட கத்தார்!

துடிப்புடன் துணிவோ டேற்ற
=துயர்களை விவசா யத்தில்
படிப்படி யாய்,உ யர்ந்த
=பாமரன் வளர்ச்சி போற்றார்
அடிப்படை விவசா யத்தின்
=அருமையை மறந்து போனார்!
நடிப்பவர் தொப்பூள் காட்டி
=நாட்டினை உயர்த்து வாரோ?
=====
(என்றோ படித்ததின் இன்றைய நினைவில் எழுந்தது..)

எழுதியவர் : காளியப்பன் எசேக்கியல் (8-Jul-15, 8:53 am)
பார்வை : 104

மேலே