அன்பும் அறிவும்
அன்பும் அறிவும்
--------------------
கிருக்கல்களும்
கவிதை
ஆகும்
அன்பு
இருந்தால்!
எழுத்தும்
மதிப்பு
பெறும்
அறிவு
இருந்தால்!
அன்பு
--------
நீ எழுதிய
யாவும் கவிதையே...
அறிவு
--------
எவ்வளவு தூரம்
நீ சென்றாலும்
உன் அடக்கத்திற்கு
இணை நீ மட்டுமே...
என்ன தவம்
நான் செய்தேன்
தெரியவில்லை !
நீ எனக்கு
தோழியாக கிடைத்தமைக்கு...
எந்த வினாவிற்கும்
விடை
உன்னிடத்தில் உண்டு...
------------*****************-------------------
மனிதர்களுக்கு அறிவிற்கும்,அன்பிற்கும்
வித்தியாசம் தெரியாமல் போயிற்று...
எப்படி தெரியும்,எல்லோரையும் பின்னுக்கு தள்ளி விட்டு
தான் மட்டுமே முன்னேற வேண்டும் .என்று நினைத்தால் .
அறிவு என்பது அன்பை அழகாய் வழிநடத்துவதே!
அன்பு என்பது அறிவை பெருக்க உற்ற துணையாய் இருந்திடல்.....